கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டம்

நெல்லையில் கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2021-10-23 21:57 GMT
நெல்லை:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகள் ஆதரவு கேட்டு பிரசாரம் செய்தனர். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாநில பொருளாளர் தென்காசி முத்துச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். 

மாவட்ட அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், தென்காசி மாவட்ட நிர்வாகி பிரபு சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் ஆகியோரும் பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்