அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-23 18:43 GMT
திருச்சி, அக்.24-
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சோனைக்கருப்பையா சிறப்புரையாற்றினார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் கூறியபடி மீண்டும்  செயல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் இல்லாத அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவன பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும், மத்திய அரசு வழங்கியதுபோல 11 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை மாதம் முதல் உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்