வாணியம்பாடியில் பலத்த மழை

வாணியம்பாடியில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-10-23 18:28 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியில் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

இந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மேல் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

வாணியம்பாடி- நியுடவுன் மேம்பாலம் அருகே உள்ள 4 முனை சந்திப்பு பகுதி, சி.எல்.ரோடு பகுதியில் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் முடிந்து செல்லும் மாணவ-மாணவிகள் வெள்ள நீரில் சிக்கி தவித்தனர்.

மேலும் செய்திகள்