ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை தொடங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை தொடங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-10-23 18:09 GMT
ஆம்பூர்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  அரவையை தொடங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு பகுதியில் அமைந்துள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தொழிற்சங்கம் இணைந்து சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

 இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாதனூர் ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு் கட்சி மாவட்ட துணை செயலாளர் தேவதாஸ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் சர்க்கரை ஆலை அதிகாரியிடம் கோரிக்கை மணு வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்