கம்பத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை
கம்பத்தில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.
கம்பம்:
கம்பம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை, கம்பத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், வீட்டில் சமையல் அறைகளில் எண்ணெய் பாத்திரங்களில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது, சணல் பையை தண்ணீரில் நனைத்து தீ பரவும் இடத்தில் போர்த்த வேண்டும், மழைக்காலங்களில் ஆறு, குளங்களுக்கு மாணவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குளிக்க செல்லக்கூடாது, தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும் போது காலில் காலணி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும், குறிப்பாக பட்டாசு வெடிக்கும் இடத்தில் வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும், கையால் பட்டாசு வெடிக்க கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து தீப்பற்றினால் அதனை தண்ணீரை ஊற்றியும், மணலை கொட்டியும் எவ்வாறு அணைக்கலாம் என்பது குறித்து தீயணைப்பு படைவீரர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.