பீச் மாரத்தான் போட்டி

தூத்துக்குடியில் பீச் மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2021-10-23 14:26 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரையில் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பீச் மாரத்தான் போட்டி நடந்தது. தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோஸ்டல் எனர்ஜன் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் 4 கிலோமீட்டர் தூரமும், மாணவிகள் 3 கிலோமீட்டர் தூரமும் கடற்கரை மணலில் ஓடினர். இந்த போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக தருவைகுளத்தில் நேற்று நடந்தது.
இப்போட்டிக்கு கோஸ்டல் எனர்ஜன் திட்ட இயக்குனர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். கோஸ்டல் எனர்ஜன் நிலைய இயக்குனர் பரமேஸ்வரன் மற்றும் தருவைகுளம் பஞ்சாயத்து தலைவர் காடோடி ஆகியோர் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் ஆண்கள் பிரிவில் முதலாவதாக வந்த மாணவர்கள் 10 பேருக்கும், அதுபோல் பெண்கள் பிரிவில் முதலாவதாக வந்த மாணவிகள் 10 பேருக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபி சுஜின் ஜோஸ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமலதாஸ், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்றோரூபன், உடற்கல்வி ஆசிரியர் ரவிகாந்த், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்