அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில், பழனி பை-பாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மத்திய சங்க நிர்வாகி மாணிக்கம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு உடனே தொடங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.