கார் மோதி கணவன் கண் எதிரே மனைவி பலி
மோட்டார்சைக்கிளில் ெசன்றபோது கார் மோதி கணவன் கண் எதிரே மனைவி பலியானார்.
கண்ணமங்கலம்
மோட்டார்சைக்கிளில் ெசன்றபோது கார் மோதி கணவன் கண் எதிரே மனைவி பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் புஷ்பகிரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (வயது 65), விவசாயி.
இவரின் மனைவி பாக்கியம்மாள் (55). இன்று அதிகாலை கணவன்-மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் சந்தவாசல்-முனிவந்தாங்கல் செல்லும் வழியில் கல்லாங்குத்து பகுதியில் உள்ள தங்களின் நிலத்துக்கு சென்றனர்.
சித்தூர்-கடலூர் சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு கார் திடீரென அவர்கள் சென்ற மோட்டார்ைசக்கிள் மீது மோதியது.
விபத்தில் கணவர் கண் எதிரே பாக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பழனியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சந்தவாசல் போலீசார் விரைந்து வந்து பாக்கியம்மாளின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கு காரணமான காரின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.