சி.ஆர்.பி.எப்.வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
சி.ஆர்.பி.எப்.வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
போத்தனூர்
கோவை அருகே வெள்ளலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது51). இவரது மனைவி ஷர்மிளா தேவி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அலெக்சாண்டர் சத்தீஸ்கர் மாநிலத்தில் துணை ராணுவ பிரிவு (சி.ஆர்.பி.எப்) வீரராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அலெக்சாண்டர் கடந்த மாதம் விடுமுறையில் கோவையில் உள்ள தனதுவீட்டிற்கு வந்தார். சம்பவத்தன்று அலெக்சாண்டர் குடித்து விட்டு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி நமக்கு வயதுக்கு வந்த இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. ரூ.15 லட்சத்திற்கும் மேல் கடன் உள்ளது. அடிக்கடி மதுகுடித்துக் கொண்டிருந்தால் எப்படி? குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குடியை நிறுத்துங்கள் என்று கூறி கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் அலெக்சாண்டர் மனம் உடைந்து, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலெக்சாண்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------