அரசு ஊழியர் பலி
உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீதுவேன்மோதியதில், அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
உடுமலை
உடுமலை அருகே மோட்டார் சைக்கிள் மீதுவேன்மோதியதில், அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
உடுமலையை அடுத்துள்ள புக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
ரங்கநாதன் வயது32. வருவாய் துறையில் இளநிலை உதவியாளரான இவர் உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சார்பு நிறுவனமான எரிசாராய ஆலையில் கலால்துறையின் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் பணி முடிந்தபிறகு தனது மனைவியின் ஊரான சடையபாளையத்தில் உள்ள மகனை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார்.
பலி
உடுமலை-பொள்ளாச்சி சாலையில் முக்கோணம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதனை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ரங்கநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த விபத்து குறித்து ரங்கநாதனின் மனைவி கோகிலாமணி உடுமலைபோலீசில் புகார் செய்தார்.
இதையொட்டி உடுமலை போலீசார், வேனை ஓட்டிவந்த பாலக்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் நிஜாமுதீன் (24) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.