வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பாவூர்சத்திரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-21 23:18 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 23). இவர் கடந்த 6-ந் தேதி காரில் கடத்திச்சென்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜோயல், விஜய் ஆகிய 2 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் துரைமுருகன் என்பவரை தூத்துக்குடி மாவட்ட தனிப்படை ேபாலீசார் பிடிக்க சென்றபோது, அவர் போலீசாரை அரிவாளால் தாக்கியதால் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, நாகர்கோவில் கோட்டாறு பீச் ரோடு பகுதியை சேர்ந்த சுடலைமணி (44) என்பவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்