செல்போன் பறித்த 5 வாலிபர்கள் கைது

செல்போன் பறித்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-10-21 20:06 GMT
திருச்சி
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜப்ரீன் சுரான் (வயது 27), அரியலூர் மாவட்டம், செந்துறை அம்பேத்கர் நகரை சேர்ந்த சரத்குமார் (24) ஆகியோர் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி செல்போன் பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலக்கினர். அதன்படி, ரோந்து போலீசார் அவர்கள் சென்ற வழியில் சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர்.
இதேபோல கண்டோன்மெண்ட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அரிஸ்டோ ரவுண்டானா அருகில் சில இளைஞர்கள் ஒருவரிடம் இருந்து செல்போனை கத்தி முனையில் பறித்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியதில் மற்றவர்கள் இருக்கும் இடத்தை கூறினார். அதன்பேரில், அந்த வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ராம்ஜிநகர் கள்ளிக்குடியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (23), காந்தி காலனியை சேர்ந்த ஜெகதீஷ் (23), மோகன்ராஜ் (23) என்பது தொியவந்தது. கைது செய்யப்பட்ட  5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்