ராமராஜபுரத்தில் நெல்கள் கொள்முதல் செய்வதில் காலதாமதம் விவசாயிகள் கவலை

ராமராஜபுரத்தில் நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2021-10-21 15:12 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரத்தில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 
இந்நிலையில் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் கடந்த சில நாட்களாக நெல்கள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வபோது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நெல்கள் நனைந்து நாற்றுகள் போல முளைத்து வீணாகிறது. எனவே விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது அறுவடை சீசன் என்பதால் விவசாயிகள் அதிகளவு நெல்களை விற்பனை செய்ய கொண்டு வருகிறார்கள். ஆனால் கொள்முதல் நிலையத்தில் அதிக அளவு ஆட்களை நியமித்து நெல்களை விரைந்து கொள்முதல் செய்யாமல் காலதாமதம் செய்கின்றனர். இதனால் மழையில் நனையும் நெல்கள் முளைத்து நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே நெல்களை விரைந்து கொள்முதல் செய்ய போதியளவு ஆட்களை நியமனம் செய்யவேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்