செல்போனில் கேம் விளையாட முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை
செல்போனில் கேம் விளையாட முடியாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள செல்லியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் விவசாயி. இவருடைய மகன் சிரில்நேசன் (வயது 19). இவர் தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். இவர் ஆண்ட்ராய்டு செல்போனில் தொடர்ந்து கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அந்த செல்போனை வாங்கி கொண்டு சாதாரண செல்போனை சிரில்நேசனுக்கு கொடுத்து உள்ளனர். அதில் கேம் விளையாட முடியாததால் மனமுடைந்்து காணப்பட்ட மாணவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவர் இறந்திருப்பது தெரியவந்தது. மாணவர் சிரில்நேசன் தற்கொலை தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.