ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-20 22:04 GMT
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் நேற்று மேலப்பாளையம் - முன்னீர்பள்ளம் ரோட்டில் ராஜா நகர் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் 28 மூட்டைகளில், 1,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே போலீசார் லோடு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை அருகே உள்ள திருமலைகொழுந்துபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த  பட்டாணி (வயது 35) என்பதும், ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பட்டாணியை கைது செய்து, ரேஷன் அரிசியை லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்