விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
பேட்டையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டை:
விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பால கணேசன் தலைமை தாங்கினார். வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் கண்ணன், பிரசார அணி தலைவர் இளங்கோ, முத்துராஜ், மாருதிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.