சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற தொழிலாளிக்கு வலைவீச்சு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 37). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாமணி வலைவீசி தேடி வருகின்றனர்.