க.பரமத்தி
சின்னதாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெயில் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 2 மணி அளவில் சின்னதாராபுரம், நேரு நகர், வெங்கடாபுரம், அகிலாண்டபுரம், சூடாமணி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல, நொய்யல், புன்னம்சத்திரம், பசுபதிபாளையம், மூலிமங்கலம், பேச்சிப்பாறை, காகிதபுரம், பாலத்துறை, தவுட்டுப்பாளையம், நஞ்சைபுகளூர், திருக்காடுதுறை, கோம்புப்பாளையம், நடையனூர், முத்தனூர், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புபாளையம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து வேகமாக பெய்தது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக விவசாய பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.