வீட்டிலிருந்து மாயமானவர் ஆற்றில் பிணமாக கிடந்தார்

வீட்டிலிருந்து மாயமானவர் வந்தவாசி ஆற்றில் பிணமாக கிடந்தார். சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-20 18:35 GMT
வந்தவாசி
 
வீட்டிலிருந்து மாயமானவர் வந்தவாசி ஆற்றில் பிணமாக கிடந்தார். சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு திரும்பவில்லை

வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்திரன் (வயது 51). இவருக்கு, லட்சுமி என்ற மனைவியும், கமலக்கண்ணன் என்ற மகனும், அமுதா என்ற மகளும் உள்ளனர். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், வந்தவாசி நகராட்சி தகனமேடை அருகில், சுகநதி ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேசுவரய்யா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், மஞ்சுநாத், தணிகைவேல் உள்பட போலீசார் விரைந்து வந்து நகராட்சி ஊழியர்கள் துணையோடு பிணத்தை மீட்டனர்.

மர்மம்

விசாரணையில் இறந்து கிடந்தவர் சந்திரன் என்பது தெரியவந்தது. அவரது சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்