மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த சாணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 31). இவர் மீது ஏற்கனவே மணல் கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து வினோத்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி சிறையில் உள்ள வினோத்குமாரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.