சுகாதாரமான குடிநீர் வினியோகிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

சுகாதாரமான குடிநீர் வினியோகிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனா்.

Update: 2021-10-20 17:18 GMT
விழுப்புரம், 

செஞ்சியை அடுத்த புலிவந்தி கிராம ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இவர்கள் வசிக்கும் பகுதியில் உப்புநீர் கலந்த குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதுபற்றி ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லலை.

ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் காலி குடங்களுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். 

இதையடுத்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்