கபிலர்மலை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி மனைவி, டிரைவர் காயம்
கபிலர்மலை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி பலி மனைவி, டிரைவர் காயம்
பரமத்திவேலூர்:
கபிலர்மலை அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். அவருடைய மனைவி, கார் டிரைவர் காயம் அடைந்தனர்.
தொழிலாளி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கமித்திரன் (வயது 31). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லதா (27). இவர்கள் இருவரும் தங்களது 1½ வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியில் உள்ள லதாவின் தாயார் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் நேற்று மீண்டும் மலையம்பாளையம் செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் கபிலர்மலை செம்மடை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை நோக்கி எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சங்கமித்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
விசாரணை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் சங்கமித்திரன், லதா ஆகியோரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சங்கமித்திரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைம் அடைந்த லதா மற்றும் சேலம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் மகுடேஷ்வரன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் இந்த விபத்தில் 1½ வயது குழந்தை காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.