பிளம்பர் மர்மசாவு; போலீசார் விசாரணை

பிளம்பர் மர்மசாவு; போலீசார் விசாரணை

Update: 2021-10-20 16:51 GMT
பள்ளிபாளையம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா அமரகுந்தியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவர் மனைவியை பிரிந்து தனியாக அங்கு வசித்து வந்தார். மேலும் கடந்த ஒரு மாதமாக இவர் நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் தங்கி பிளம்பராக வேலை செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று மதியம் வெப்படை அருகே புளியம்பட்டியாம்பாளையம் கருப்பனார் கோவில் அருகே மர்மமான முறையில் செல்வம் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக வெப்படை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிளம்பர் செல்வம் அதிகம் மது குடித்து அதனால் மயங்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்