ஊட்டியில் பலத்த மழை

ஊட்டியில் பலத்த மழை

Update: 2021-10-20 14:36 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மதியத்திற்கு பின்னர் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக மாறியது. மாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. 

இந்த மழை 20 நிமிடத்துக்கு மேல் பலத்த மழையாக பெய்தது. இதனால் சேரிங்கிராஸ் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.
ஊட்டி படகு இல்லத்தில் பலத்த மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிதி படகுகள், துடுப்பு படகுகள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. 

மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டது. மழை விட்ட பின்னர் படகுகளில் தேங்கியிருந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் இயக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- கூடலூர்-19, ஓவேலி-12 மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்