வாலிபருக்கு கத்திக்குத்து; 5 பேர் கைது
மதுரையில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரையில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபருக்கு கத்திக்குத்து
மதுரை பொன்மேனி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஸ் (வயது 27). இவருக்கும் மாடக்குளம் திருப்பதி நகரை சேர்ந்த கண்ணனுக்கும் (31) இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாடக்குளம் பகுதியில் உள்ள நண்பர்களை பார்க்க சதீஸ் சென்று உள்ளார்.
அப்போது அந்த வழியாக நண்பர்களுடன் வந்த கண்ணன் அவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர்கள் கத்தியால் சதீசை குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
5 பேர் கைது
பின்னர் அவர் இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், அவரது தம்பி ரமேஷ் (19), சங்கர் (35), சீனிவாசன் (22), அருண்ராமன் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.