கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்தவர் கைது
கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், 4 அணு உலைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மிகவும் பாதுகாப்பான இப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அணுமின் நிலைய வளாகத்தில் ஒருவர் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தார். அவர் நடமாடியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் விரைந்து சென்று அவரை பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் விஜேந்தர்சிங்கிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி அலங்கார ராஜ் (வயது 55) என்பது ெதரியவந்தது. அவர் கடந்த 8 ஆண்டுகளாக கஞ்சாவுக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்ேதாணி அலங்கார ராஜ் கூடங்குளம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.