தடகள போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூர் தம்பதி சாதனை
தடகள போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தம்பதி சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தடகள போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தம்பதி சாதனை படைத்துள்ளனர்.
தடகள போட்டி
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பாக 93-வது மாநில அளவிலான தடகள போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இப்போட்டிகளை தமிழ்நாடு தடகள சங்க தலைவர், விளையாட்டு துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் சீனியர் தடகள வீரர்கள், மூத்தோர் தடகள வீரர்கள் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
இதில் ராஜபாளையம் மொட்டை மலை அதிரடி படை பிரிவில் பணிபுரிந்து வரும் சிவகாசி ஈஞ்சார் நடுவப்பட்டியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு அனைத்து பிரிவினர் போட்டியில் 5000 மீட்டர் வேக நடை போட்டியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.
1500 மீட்டர் மூத்தோருக்கான ஓட்ட போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார்.
வெள்ளி பதக்கம்
அதேபோல் அவருடைய மனைவி விஜயகமலா 3000 மீட்டர் வேக நடை போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
போட்டியில் வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தியை காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாராட்டினர்.