சேதமடைந்த பாலத்தால் பொதுமக்கள் அவதி

வத்திராயிருப்பு அருகே சேதமடைந்த பாலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2021-10-19 19:27 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே சேதமடைந்த பாலத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 
ஆற்றுப்பாலம் 
வத்திராயிருப்பில் இருந்து மகாராஜபுரம் செல்லும் சாலையில் கல்லணை ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலை பகுதியில் இருந்து பெய்யும் மழைநீர் இந்த கல்லணை ஆற்றுப் பாலம் வழியாக ஆலங்குளம் செல்கிறது. 
இந்த கல்லணை ஆற்றுப்பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து விட்டன. 
நடவடிக்கை 
அத்துடன் இந்த பாலத்தின் உயரம் குறைவாக உள்ளதால் ஆற்றில் மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும் பொழுது செடி, கொடிகள் மற்றும் மரங்கள் பாலத்தில் அடைத்து விடுகிறது. இதனால் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். 
எனவே இந்த பாலத்தினை அகற்றி விட்டு புதிதாக இப்பகுதியில் ஆற்றுப்பாலம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்