ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
அணைக்கட்டு அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஏரியில் மூதழ்கி பலியானார்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் ஏரியில் மூதழ்கி பலியானார்.
அணைக்கட்டை அடுத்து தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மதுசூதனன் (வயது 17), வேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று விடுமுறை என்பதால் அவரது 4 நண்பர்களுடன் மதுசூதனன் அணைக்கட்டு அருகே உள்ள நாராயணபுரம் ஏரியில் குளிக்க சென்றுள்ளார்.
இதனையடுத்து 5 பேரும் ஏரியில் குளித்தனர். கரைக்கு திரும்பும் போது 4 பேரும் மட்டும் வந்தனர். மதுசூதன் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மீண்டும் ஏரியில் நீந்தி சென்று மதுசூதனனை தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை கரைக்கு எடுத்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.