கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் திருட்டு

திருச்சி, அக்.20-
திருச்சி பீமநகர் நியூராஜாகாலனி பொன்விழாநகரை சேர்ந்தவர் அப்துல்லா ராஜா (வயது 30). இவர் கட்டிட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது வீட்டில் பீரோவில் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த 17-ந் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது, அந்த நகைகளும், பணமும் திருட்டு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல்லா ராஜா இது குறித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.