தூக்குப்போட்டு வெல்டர் தற்கொலை
தூக்குப்போட்டு வெல்டர் தற்கொலை செய்து கொண்டார்
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கோனார் நகரை சேர்ந்த பொன்னுசாமி மகன் கார்த்திக் (வயது 28). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பட்டறையில் வெல்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜனனி. இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வடசேரியில் குடியிருந்து வந்தனர். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தையை தூக்கிக் கொண்டு ஜனனி வீட்டை விட்டு வெளியேறினார். இதனால், மனவேதனையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டு கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னுசாமி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.