பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் தன் மீதும் தீ வைத்துக்கொண்டார். காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-19 18:02 GMT
நெமிலி

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் தன் மீதும் தீ வைத்துக்கொண்டார். காயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குவாதம்

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த பெருவளையம் தாந்தோனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 48). தொழிலாளி. நேற்று முன்தினம் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்தவர் தன் மனைவி அலமேலுவின் (45) நடத்தையில் சந்தேகப்பட்டு ஏதோ பேசவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வந்த பெட்ரோலை மனைவி மீதும் தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். 
வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டே வெளியே வந்தவரை ஊர் பொதுமக்கள் பார்த்து அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அலமேலுவையும் அவர்கள் மீட்டு இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புகார்

இதுகுறித்து அலமேலுவின் மகள் ரூபாஸ்ரீ அளித்த புகாரின் பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேசிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்