கந்தர்வகோட்டையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
கந்தர்வகோட்டையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கந்தர்வகோட்டை:
வாலிபர் பலி
கந்தர்வகோட்டை அருகிலுள்ள மின்ணாதூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கேசவன் (வயது 30). இவர் நேற்று மாலை தஞ்சாவூர் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் கந்தர்வகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். தெத்துவாசல்பட்டி அருகே வந்தபோது, சாலையில் குவித்து வைத்திருந்த நெல் குவியலை பார்க்காமல் அருகில் வந்தபோது நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி பலி
கந்தர்வகோட்டை அருகிலுள்ள கிருஷ்ணம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (51). விவசாயி. இவர் வேலாடிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது, நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய தனபால் கீழே விழுந்தார். இதில் பாடுகாயடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.