தலைக்கவசம் அணியாத 434 பேர் மீது வழக்கு

தலைக்கவசம் அணியாத 434 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது.

Update: 2021-10-19 17:22 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப் பட்டது. இவ்வாறு சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலில் கடந்து சென்ற 16 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 51 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற 2 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 434 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 132 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாத 18 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 51 பேர் மீதும் என மொத்தமாக  704 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.92 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பொது இடங்களில் கொரோனா பரவும் விதமாக முககவசம் அணியாமல் சென்றதாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்