தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 4 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-19 16:46 GMT
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது 59) என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்ல்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 15  மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று தொப்பூர் போலீசார் உம்மியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த காவேரியம்மாள் (50) மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி அருகே பூசாரிகொட்டாய் கிராமத்தில் மதுவிற்ற நரசிம்மன் (56) மற்றும் வடிவேல் (45) ஆகிய 2 பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்