கூடலூரில் பஞ்சுமெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ

கூடலூரில் பஞ்சுமெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-10-19 14:51 GMT

கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 5-வது வார்டு சர்ச் தெருவை சேர்ந்தவர் மகபூ (வயது 42). இவர் கூடலூரில் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் தலையணை, பஞ்சுமெத்தைகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நேற்று இங்கு எந்திரங்கள் மூலம் பஞ்சுகளை கடையும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராமல் தீப்பொறி பட்டு பஞ்சுகள் எரிய தொடங்கின இதனால் அங்கு வேலை செய்தவர்கள் உடனடியாக வெளியே ஓடி வந்து சத்தம் போட்டனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கூடலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். மேலும் தகவல் அறிந்து கம்பம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் பஞ்சுமெத்தைகள், தலையணைகள், பஞ்சுகடையும் எந்திரம், சோபா செட், தையல் எந்திரம் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்