வெவ்வேறு சம்பவங்களில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சமயபுரம், அக்.20-
வெவ்வேறு சம்பவங்களில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
என்ஜினீயர்
சிறுகனூர் அருகே உள்ள கருடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் பூபதி (வயது 23). பி.இ. சிவில் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் பெரம்பலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதை அவரது தந்தை நாகராஜ் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம்உடைந்த பூபதி நேற்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு அப்பகுதியிலுள்ள ஏரிக்கரையில் மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறுகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் தற்கொலை
உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரம் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் தனியார் பள்ளியில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் வயிற்றுவலியால் அவதி அடைந்து வந்த சித்ரா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.