தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள்
தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள்
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்சு-2 மற்றும் 3) பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ரேஞ்சு-2 பகுதியில் உள்ள கோட்டபாடியில் காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் நேற்று மதியம் மீண்டும் அங்குள்ள தேயிலை தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.