விபத்துகள் ஏற்படும் அபாயம்

காங்கேயம்சென்னிமலை சாலையில் டவுன்பஸ் நிலையம் எதிரில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளானர்.

Update: 2021-10-19 13:29 GMT
காங்கேயம், அக்.20-
காங்கேயம்சென்னிமலை சாலையில் டவுன்பஸ் நிலையம் எதிரில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளானர்.
விபத்துகள் ஏற்படும் அபாயம்
காங்கேயம் நகரம் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாகும். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மற்றும் விபத்துகள் ஏற்படுவது நடந்து வருகிறது.குறிப்பாக காங்கேயம் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பகுதி அதிக மக்கள் கூடும் பகுதியாகும். அதிக அளவில் வியாபாரமும் இந்த பகுதியில் தான் நடக்கிறது. இதனால் இதை சுற்றியுள்ள சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
காங்கேயம் சென்னிமலை சாலையில் டவுன் பஸ்நிலையம் எதிரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். மேலும் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக டவுன் பஸ்கள் வெளியே செல்லும் வாயிலின் எதிரில் எந்த நேரமும் மக்கள் 2 பக்கமும் சாலையை கடந்து சென்று வருவார்கள். அந்த சமயத்தில் சென்னிமலை சாலையில் இருந்து கடைவீதி மற்றும் பஸ்நிலையம் செல்லும் வாகனங்களும், கடைவீதியில் இருந்து சென்னிமலை சாலைக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வேகத்தடை
சென்னிமலை சாலையில் இருந்து அதிவேகமாக வாகனங்கள் வருவதால் சாலையை கடந்து செல்பவர்கள் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்து சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சென்னிமலை சாலையில் இருந்து வேகமாக கடைவீதிக்கு செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.மேலும் பஸ்நிலையம் அருகே சென்னிமலை சாலையில் வேகத்தை கட்டுப்படுத்த கோரி எச்சரிக்கை அறிவிப்பு பலகை  வைக்க வேண்டும்.அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்