அரசு பள்ளி வளாகத்தில் சத்துணவு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சத்துணவு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-19 02:22 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நதியா (35). இவர்களுக்கு திருணமாகி 15 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இளம்பெண் நதியா, அதே பகுதியில் உள்ள அரசினர் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் புடவையால் தூக்கிட்ட நிலையில் நதியா பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்