நெல் கொள்முதல் நிலையத்தில் இடவசதி வேண்டும்
நெல் கொள்முதல் நிலையத்தில் இடவசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கக்கரைக்கோட்டை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய அளவில் இடவசதி இல்லாததால் நெல் குவியல்கள் சாலைகளில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இட வசதி ஏற்படுத்தித் தருமாறு விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம்அணைக்கரை ஊராட்சி, தென்கரை மெயின்ரோட்டில் கடந்த ஒரு வாரமாக குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. இந்த குரங்குகள் அந்த பகுதியில் கூட்டமாக சென்று கடைகள், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி விடுகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விரட்டி சென்று கடிப்பதுமாக சாலையில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பீதி அடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், வழுத்தூர் ஊராட்சி, பாத்திமுத்து நகரில் பல வருடங்களாக சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்பட எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் பொது மக்கள்பெரிதும் சிரமப்படுகிறார்கள். மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் பொதுமக்கள் நடமாட மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் தெரு விளக்கு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பதே அந்தபகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.