காட்பாடியில் மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-18 18:27 GMT
காட்பாடி

பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் காட்பாடியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நுழைவாயில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் லோகேஷ் தலைமை தாங்கினார்.

ஊதிய உயர்வு மற்றும் போனஸ் பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், மின்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தை உடனே நிறுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அனைத்துப் பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்