மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2021-10-18 18:19 GMT
புதுக்கோட்டை, 
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டா மாறுதல், விலையில்லா வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன் உதவி, பசுமைவீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 274 மனுக்கள் பெறப்பட்டன. 
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார்.
அதிகாரிகள்
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று  கலெக்டர் மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்