பெண்ணிடம் பணம் திருட்டு

பெண்ணிடம் பணம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-18 17:41 GMT
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் சின்ன தோப்புத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி கலா (வயது47). இவர் கீழச்சிவல்பட்டியில் உள்ள ஒரு மகளிர் குழுவில் உறுப்பினராக சேர்ந்து குழுக்களுக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த மாதத் திற்கான பணத்தை குழு உறுப்பினர்களிடம் வசூல் செய்து ரூ.23ஆயிரத்தை கட்டுவதற்காக நேற்று மதியம் திருப்பத்தூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் கீழச்சிவல்பட்டி சென்றுள்ளார். அப்போது கீழச்சிவல்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது பையில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, கலா கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தினர். பின்னர் கலா திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்