ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டையில் மக்கள் குைறதீர்வு நாள் கூட்டம் நடந்தது. அதில் 295 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2021-10-18 17:40 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மக்கள் குைறதீர்வு நாள் கூட்டம் நடந்தது. அதில் 295 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல், கொரோனா 2-வது அலை பரவல் ஊரடங்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகியவை தொடர்பாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசு உத்தரவுபடி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து, வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத் துறை, அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் பொது நலன் சார்பாக மனுக்கள் என மொத்தம் 295 பெறப்பட்டன.

கொரோனா விதிமுறையை பின்பற்றி

அந்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான மனுக்களாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். 

மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். கபசுர குடிநீர் வழங்கல், முகக் கவசம் அணிதல், தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி மனுக்கள் பதிவு செய்தல் போன்ற அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மனுக்களை பெற்று மாற்றுத்திறனாளிகள் நாலு பேருக்கு உடனடியாக உபகரணங்கள் வழங்கப்பட்டன. 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்