பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றவரை நீக்க வேண்டும். கலெக்டரிடம் கோரிக்கை மனு

போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றவரை நீக்க வேண்டும்

Update: 2021-10-18 16:59 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜீவா, பவுரி, தீபாவளி ஆகிய 3 பேர் தனித்தனியாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். 
அதில் கூறியிருப்பதாவது:-

குனிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட (எஸ்.சி) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜெயசீலன் மனைவி மரகதம் என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆதிதிராவிடர் என பொய்யான சான்றிதழ் வழங்கியுள்ளார். ஜெயசீலனி கல்வி சான்றிதழில் குற செட்டியார் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் மரகதம் இந்து குறவன் என்று பொய்யான சாதி சான்றிதழ் பெற்று வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்