கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதையடுத்து கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2021-10-17 21:03 GMT
கன்னியாகுமரி:
சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதையடுத்து கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா தலம்
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது சில வாரங்களாக வார நாட்களில் கடற்கரைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்காமல் இருந்தது.
இதனால், கன்னியாகுமரி கடற்கரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்களில் வெறிச்சோடி காணப்பட்டது.  தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியளித்தது. 
புனித நீராடினர்
இதனைத்தொடர்ந்து விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடற்கரை, சுனாமி நினைவு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும், கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அரசு தளர்வுகள் அறிவித்ததால் நீண்ட இடைவெளிக்கு பிறகு பக்தர்கள் கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்