தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் திரளாக வந்து பிரார்த்தனை

வார இறுதி நாட்களில் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கியதால் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் திரளாக வந்து பிரார்த்தனை செய்தனர்.

Update: 2021-10-17 18:55 GMT
விருதுநகர், 
வார இறுதி நாட்களில் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கியதால் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் திரளாக வந்து பிரார்த்தனை செய்தனர். 
இறுதி நாட்களில் வழிபாடு 
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தடையை நீக்கி அறிவித்தார். ஆதலால் வார இறுதி நாட்களில் கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  அந்தவகையில் விஜயதசமி மற்றும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்றும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மனநிறைவடைந்தனர். வெள்ளிக்கிழமையன்று மசூதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் தொழுகை நடத்தினர்.
பிரார்த்தனை 
 இதனை தொடர்ந்து நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் திரளாக வந்து பிரார்த்தனை செய்தனர். குறிப்பாக தேவாலயங்களில் பங்குத் தந்தைகள் மறையுடன், சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர். இதில் கிறிஸ்தவ பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.  இதுகுறித்து தேவாலயத்திற்கு வந்திருந்தவர்கள் கூறியதாவது:-  கொரோனா பாதிப்பால் தேவாலயங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே ஜெபம் செய்து வந்தோம். தற்போது தமிழக அரசு வார இறுதி நாட்களில் தேவாலயங்களில் வழிபாடு நடத்த அனுமதி அளித்துள்ள நிலையில் தேவாலயத்திற்கு வந்து மனநிறைவோடு ஜெபம் செய்து உள்ளோம். குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து பிரார்த்தனை செய்தது மிகுந்த மனநிறைவை தருகிறது.  மேலும் பங்குத்தந்தையரின் மறையுரை கேட்பதில் மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது.
 இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்