அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டம்

சிவகங்கை வடக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-10-17 18:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை வடக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடப்பட்டது.

பொன்விழா

சிவகங்கை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வின் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமராக்கி தெற்கில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் கட்சியினர் மலர்அஞ்சலி செலுத்தினர். பின்னர் அ.தி.மு.க. கொடியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து அந்த பகுதியில்்உள்ள பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து தமராக்கி வடக்கு, சோழபுரம், ஒக்கூர், அண்ணாநகர், மதகுபட்டி, கீழப்பூங்குடி உள்பட 17 இடங்களில் அ.தி.மு.க.கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாகரன், அ.தி.மு.க. அவைதலைவர் ஏ.வி. நாகராஜன், காரைக்குடி ஆவின் தலைவர் அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் கோமதிதேவராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாபு, கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார், மற்றும் சங்கர ்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை
இதை தொடர்ந்து சிவகங்கையை அடுத்த முத்துபட்டியில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிக்கூடத்தில் மதிய உணவு வழங்கபட்டது. சிவகங்கை நகர் அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ, ஆகியோர் மாலை அணிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். 
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கற்பகம், நாகராஜன், நகர் செயலாளர் ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன்,  கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை தலைவர் வக்கீல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நகரின் பல இடங்களில் அ.தி.மு.க. கொடி ஏற்றப்பட்டது.

மேலும் செய்திகள்