மின்சாரம் தாக்கி பெண் சாவு
நீடாமங்கலம் அருகே வயலில் நடவு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே வயலில் நடவு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி பெண் சாவு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் தென்கொண்டார் இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பன். இவரது மனைவி சாரதாம்பாள் (வயது58).விவசாய கூலித்தொழிலாளி. நேற்று இவர் தனது உறவினரான நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் பழைய ஆதிதிராவிடர் தெருவைச்சேர்ந்த கவுசல்யா என்பவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது சாரதாம்பாள் அருகே உள்ள ஒரு வயலில் நடவு பணிக்கு சென்றார். அங்கு நடவு பணியில் ஈடுபட்ட போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சாரதாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், ஊராட்சிமன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்தனர். மேலும் போலீசார் சாரதாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் 30 ஆண்டுகளாக மாற்றாமல் உள்ள மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.